இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்!
Tuesday, December 7th, 2021
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் 59 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இவரை நியமித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் லியனகே கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர் மற்றும் புதிய நியமனத்துக்கு முன்னர், இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியவர்.
சேவையில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுக்குப் பிறகு இவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மாணவர்களுக்கான சீருடை வழங்கும் பணிகள் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெ...
|
|
|


