இராணுவத்தினரை அடையாளம் காட்ட முடியாது – இராணுவத் தளபதி!

வடக்கிலுள்ள மக்கள், பயங்கரவாதத்தை முழுமையாக நிராகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் தென் பகுதி மக்கள் மத்தியில் இப்பொழுது சிறந்த நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கு உச்ச அளவு பங்களிப்பை இராணுவம் வழங்கும்.
இதேவேளை, வடக்கு, தெற்கு மக்கள் மத்தியில் பிளவுகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
இராணுவத்தினர் இந்த நாட்டு மக்களின் கௌரவத்தையும், மதிப்பையும் வென்ற யுத்த வீரர்களாவர். எனவே, இராணுவத்தினரை தவறு செய்பவர்களாக அடையாளம் காட்ட முடியாது என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|