இரத்தக் கரையுடன் வீதியோரம் ஆண் ஒருவரின் சடலம் !
Friday, March 4th, 2022
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இனங்காணமுடியாத நிலையில் நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் காணப்படுகின்றது.
இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மரணம் விபத்தா அல்லது சதி வேலையா என இளவாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல் பெயரில் பணமோசடி - அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!
அரச உடமையாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
ஆரியகுளத்தை புனரமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டம் யாழ் மாநகரசபையினரால் முன்னெடுப்பு!
|
|
|


