இரண்டு வாரங்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

அத்துடன் பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இம்முறை பரீட்சைக்கு 6 இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி - அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் ப...
ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் - அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்க...
அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் - விசாரணைகளை ஆரம்பதித்ததுர் குற்றப் ப...