இரண்டு இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் தெரிவு! 

Friday, May 18th, 2018

இலங்கையில் இருந்து முற்றாக வறுமையை ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி அனுகூலங்களை வழங்குவதற்குஅரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் கட்சி பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சார்ந்த 22 தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தில் காலத்திற்குப் பொருத்தமான மாற்றங்களை அறிமுகம் செய்து வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் நிவாரணம்வழங்கும் திட்டத்தை சீராக்கி, அதில் அரசியல் மயமாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts: