இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை இறுதி முடிவு!
Sunday, April 18th, 2021
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் 19 தடுப்பூசியினை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழு தொற்று நோய் தடுப்பு பிரிவில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில் அது தொடர்பான தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையில் நாட்டில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் பெற்றோலுக்கு நெருக்கடி: அமைச்சர் அர்ஜுன எச்சரிக்கை!
யாழ் மாநகரசபையின் அவசர செலவுகளிற்காக மாதாந்தம் 16இலட்சம் ஒதுக்கீடு!
சுங்க தொழிற்சங்க பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடர்ந்தும்!
|
|
|


