இரட்டை குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்!
Friday, June 16th, 2017
இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் குடிவரவுத் மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மேற்படி விபரங்களை வெளியிடுமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மேற்படி தகவல்கள் வெளியிடப்படவுள்ளன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி!
தபால் நிலையங்கள் அனைத்துக்கும் இணைய வசதி : அமைச்சர் பந்துல குணவர்தன!
இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டது!
|
|
|


