இரட்டை குடியுரிமைக்கான கோரிக்கை அதிகரிப்பு – குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022

2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 1,621 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேரும், இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இரட்டைக் குடியுரிமைக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதன்படி, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2021 ஆம் ஆண்டில் 382,560 கடவுச்சீட்டுகளையும், 398 இராஜ தந்திர கடவுச்சீட்டுகளையும் விநியோகித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் 209,411 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆண்டில் வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 175 என்றும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் – ஆணைக்குளுவின் தலைர் மகிந...
ஊழியர்கள் பழிவாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின. யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ச...
நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக் நிறுவனம் - அமைச்...