இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள் – இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்து!

கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதனால், இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ் ஷீல்ட் கவசம் ஒன்றை அணிவதும் மிக முக்கியம் என ஆரம்ப சுகாதார மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் தடுப்பூசியின் வகையை பொருட்படுத்தாமல், நாட்டில் கிடைக்கின்ற ஏதாவது ஒரு வகையான தடுப்பூசியை, அருகிலுள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றிற்கு சென்று மிகவும் விரைவாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லைத்தீவு விவசாயிகளுக்கு உரமானியக் காப்புறுதி இழப்பீடு!
யாழ்ப்பாணத்திற்கு மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை!
இலங்கையில் அஸ்ட்ராசெனிகா பெற்றுக்கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல்!
|
|