இயற்கை அனர்த்தம் – வடக்கில் 16,872 குடும்பங்கள் பாதிப்பு!
Monday, December 24th, 2018
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 16,872 குடும்பங்களைச் சேர்ந்த 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த வெள்ள அனர்த்தத்தில் 238 வீடுகள் தேமடைந்துள்ளதுடன் இவற்றில் 10 வீடுகள் முற்றாகவும் 218 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,602 குடும்பங்களைச் சேர்ந்த 11,299 பேர் 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 24 மணித்தியாலமும் செயற்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 117 என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


