இம்மாதம் 17 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடுகிறது!

எதிர்வரும் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த வாரம் செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், வெள்ளிக்கிழமை தவிர, வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் சபாநாயகர் நாளை கையொப்பம்!
சாதாரணதரப் பரீட்சை: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்த பாதீட்டுக்கு ஆதரவாக இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஆச...
|
|