இன்று வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம்!

Monday, July 24th, 2017

கூட்டுப்பாலியல் செய்து படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த வழக்கினை நீதிவான் நீதிமன்றில் பல மாதங்களாக விசாரணை செய்த ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் இன்றைய தினம் காலை சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவும் சாட்சியம் அளிக்கவுள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Related posts: