இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடும் வெப்பம்!
Friday, April 5th, 2019
இன்று(05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று(05) நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளது.
இதேவேளை, வடமேல் மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றையதினம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
Related posts:
பொலிஸாருக்க தரமான சீருடை - அமைச்சர் சாகல ரத்னாயக்க!
அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு!
|
|
|


