இன்று நள்ளிரவுமுதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படுகின்றது ரயில் சேவை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
Tuesday, September 12th, 2023
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக இன்று (12) நள்ளிரவுமுதல் மாற்றப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இதன்படி நாளை (13ம் திகதி) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் ரயில் சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளைமுதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோருகின்றேன்.
எந்த வேலைநிறுத்தத்திலும் பங்கேற்காமல் தங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் 18,000 ஊழியர்கள் சார்பாகவும் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


