அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவனிடம் பிரார்த்தனை – நினைவு கூறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 8th, 2024

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியில் இரவில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கமைய இன்றையதினம் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தளங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை இன்றைய தினத்தில் நினைவு கூறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் மேம்படுத்தி, மமதை, அகங்காரம் இல்லாத நாடாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமைய பிரார்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெ...
உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய பிரதமர் தலைமையில் குழு நியமனம் - அடுத்த வாரம் விஷேட அமைச்சரவைப் ...
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கு முக்கிய...