இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சை!

Sunday, August 20th, 2017

தரம் ஐந்து மாணர்களுக்கான புலமைப்பரிசில் பரிட்சை இன்று இடம்பெறவுள்ளது. நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 14 நிலையங்களில் பரிட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் இந்த பரிட்சைக்காக மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் பங்குகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற பரிட்சையின்போது தொலை தொடர்பு சாதன பயன்பாட்டால் பரிட்சைளில் மோசடிகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த வருடம் பரிட்சை நிலையங்களுக்குள் தொலைதொடர்பு சாதணங்கள் கொண்டு செல்லப்படுவது முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பரிட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் பரீட்சைக்கு முகங்கொடுத்து சித்தியடையவேண்டும் என எமது இணையத்தளம் அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Related posts: