இன்று உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
Monday, August 29th, 2016
அண்மையில் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.இந்த காலப்பகுதியில் 6 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் மேலும் அவற்றுடன் மேலும் சில பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரி, கண்டி விகாராமாஹா தேவி பாலிகா வித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பாலிகா வித்தியாலயம், கண்டி சீதா தேவி பாலிகா வித்தியாலயம் மற்றும் யாழ். இந்துக்கல்லூரி என்பன க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக மூடப்படவுள்ளன.மேற்கூறப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


