பௌத்தத்திற்கு முன்னுரிமை – பிரதமர்!

Friday, September 22nd, 2017

இலங்கை பௌத்தர்களை அதிகமாக உள்ளடக்கிய நாடு என்பதால் நாட்டின் அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடம் பாதுகாக்கப்படுகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்.

புத்த பெருமான் போதித்ததெல்லாம், குரோதத்தினால், குரோதத்தை வெல்ல முடியாது என்பதாகும். குரோதமில்லாத நிலையினாலேயே குரோதத்தை வெல்ல முடியும்.எமது இனத்துக்கு பௌத்த மதத்தைப் போதிப்பதன் மூலம் வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கிக் கொண்டு, வீணான அச்சத்தை தோற்றுவித்துக் கொண்டு, பொருளாதாரத்தை அழித்துக் கொண்டு, மக்களைப் பிரித்துக் கூறுபோடுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கு மார்ச்சுக்குள் தேர்தல் : நாடாளுமன்றில் பிரதமர் ரணில் அறிவிப்பு எதிர்வரும் 2018 மார்ச் மாதத்துக்குள் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படும். அத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்திமுடிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் தேர்தலை பிற்போடுவதற்காக மேற்படி சட்டமூலத்தை அரசு முன்வைக்கவில்லை. புதிய தேர்தலை முறைமையை அறிமுகப்படுத்தி, ஜனநாயக கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எழுந்த இந்த விடயம் தெடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன. உள்ளூராட்சி சபைத் தேர்தல், எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிற்போடப்பட்டுவந்தது.ஆனால், மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை ஆறுமாத காலத்தில் முடிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது அது நான்கு மாதத்திற்குள் நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனவே, இக்காலப்பகுதிக்குள் ஆயுட்காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும். அக்காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: