இன்று இரவு 8 மணிமுதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து முடக்கப்படுகின்றது இலங்கை – உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020

இன்று முன்னிரவு 8 மணிமுதல் எதிர்வரும் 11 ஆம்’ திகதி அதிகாலை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த 21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் அது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 20 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், வருகின்ற நாட்களில் வெசாக் மற்றும் வார இறுதி விடுமுறை தினங்கள் வருவதினால், மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் மீண்டும் தொடர் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: