இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022

இன்றிரவு (09) முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் இன்று (09) காலை ஆரம்பமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திலுள்ள மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று பகல் வேளையில் எண்ணெய் வழங்கப்படவுள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள டீசலை ஏற்றிய 02 கப்பல்களில், ஒரு கப்பலிலிருந்து டீசலை இறக்கும் செயற்பாடுகள் இன்று காலை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 38,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அதற்கான கொடுப்பனவு இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் - அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம...
சகலருக்கும் உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பு -  சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்சங்கத்தி...
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது - நீதி அமைச்...