இன்று இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம்!
Saturday, January 26th, 2019
இன்று இந்தியாவின் 70-ஆவது குடியரசு தினம்!
இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம் இன்றாகும்.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
இதேவேளை குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி மெரினா பகுதிகளில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|
|


