இன்றும் நாடாளுமன்றம் கூடியது!
Wednesday, December 5th, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளதுடன் இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்வேலி கோப்பாய்ப் பிரதேசங்களில் கால்நடைகள் திருட்டுச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரிப்ப...
சுயதொழில் கடன் திட்டம் மே மாதத்தில் நடைமுறை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா !
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது - ஜனாதிபதி கோட்டாபய ரா...
|
|
|


