இன்றுமுதல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக பரிணாமம் – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை!
Thursday, May 11th, 2023
நாட்டில் தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று வியாழக்கிழமைமுதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தேவை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் பல்வேறு பொறிமுறைகளை உள்வாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே குறித்த முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனவரியில் இரணைதீவுக்கான பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை!
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் விவசாய உற்பத்தி பற்...
தென்கொரியாவில் 8,000 இலங்கையருக்கு தொழில் - மனுஷவுடன் கொரிய மனிதவள திணைக்களம் உடன்பாடு!
|
|
|


