இன்றுமுதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசர நிலை பிரகடனம் – பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் வர்த்தமானியும் வெளியீடு!
 Monday, July 18th, 2022
        
                    Monday, July 18th, 2022
            
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்றுமுதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
ஒரு பகுதியினரின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது - அரசாங்கம் !
மழையுடனான காலநிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல - உச்ச நீதி...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        