இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது – தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து . யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Sunday, July 2nd, 2023

“யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதிலும் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தரம் 9 வரையான மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கவேண்டும். இந்தத் திட்டம் மாவட்டத்தில் இன்றிலிருந்து நடைமுறையாகின்றது.”- இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். மாவட்ட செயலகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் கல்வி நிறுவனங்களை விடுமுறைநாளாக கடைப்பிடிக்க வேண்டும்.

இது குறித்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் முகமாக யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் பிரதேச செயலர்கள் ஊடாக 200 தனியார் கல்வி நிறுவனங்களும், 200 குழு வகுப்புக்களை நடத்துகின்ற இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பிரதேச செயலர்கள் மூலம் கண்காணிப்புக்கள் இடம்பெறவுள்ளன.

மாணவர்களின் எதிர்கால மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த விசேட நடைமுறையை மனிதாபிமான அடிப்படையில் அனைத்து கல்வி நிறுவன, குழு வகுப்புக்களை நடத்தும் உரிமையாளர்களும் கவனத்தில்கொண்டு இன்றுமுதல் செயற்படுத்த வேண்டும் என்றுமு; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: