இனவாதத்தை தூண்ட சிலர் முயற்சிப்பதை எண்ணி கவலையடைகிறேன் – சபாநாயகர் கரு ஜெயசூரிய!

Monday, December 18th, 2017

நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்றது என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் 70 வருட ஜனநாயக அரசியலை கொண்ட நாடாக இலங்கை காணப்பட்டாலும், இந்த 70 வருட வரலாற்றில் இரண்டு அரசியல் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வி கண்டிருந்தன. அதற்கும் மேல் நாட்டில் பயங்கரவாதம் ஏற்பட்டது. அவற்றினால் நாடு என்ற ரீதியில் நாம் பின்தள்ளப்பட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை விட பொருளாதாரத்தில் மேம்பட்டு காணப்பட்டோம். அவ்வாறு முன்னேற்றம் கண்ட இலங்கை தற்போது பின்னடைந்துள்ளது எனவும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts: