இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்…!
Wednesday, November 4th, 2020
மன்னார் – இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
54 வயதுடைய குறித்த கிராம உத்தியோகத்தர், ஆத்திமோட்டை பகுதிக்கு சென்று நேற்றிரவு உந்துருளியில் திரும்பியபோது, காட்டுப்பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தாக இலுப்பைக்கடவை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார சேவைத் தரத்தில் இலங்கை முதல் இடத்தில்
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதில்லை - சீனா !
5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை: தனியார் பேருந்து ஊழியர்கள் நிலை மிக மோசமாக மாறுகின்றது - ய...
|
|
|


