இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் பலி – சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் மரணித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் ஆயிரத்து 202 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. தற்போதை எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே துவிச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வீதி பாதுகாப்பு தொடர்பில் பிரதிக் பொலிஸ் மா அதிபரால், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்கள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: