இந்துக் கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி!

Thursday, April 6th, 2023

யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கொக்குவில்  இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட  வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த மாணவனுக்கு  மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் - அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!
இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தகவ...