இந்திய வர்த்தக அமைச்சர் விரைவில் இலங்கை விஜயம்!

இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் அவர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது இலங்கைக்கான விஜயத்தை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் வெகுவிரைவில் அவர் இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை வெளிவிவகாரப் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை இடையிலான எட்கா உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இந்திய
எவ்வாறாயினும் இந்த உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடக்கூடாது என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சி உட்பட சில தொழிற்சங்கங்கள் வீதிப் போராட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கை புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்கவில்லை!
குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோ...
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|