இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட சந்திப்பு – இந்தியா பயணிக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க!

Sunday, July 9th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி புது டெல்லியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார்.

இதன்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: