இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமானது பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு !
Wednesday, April 12th, 2023
பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு ஒன்று, இன்று (12) முதல் மூன்று நாட்களுக்கு இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறுகிறது.
இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த நுண்ணறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சாரண இயக்கத்தினருக்கு மன நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு!
எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!
பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!
|
|
|


