பாதுகாப்பு அதிகரிக்கப்படும் சுமந்திரனும் பாதுகாப்பு அகற்றப்படும் மஹிந்தவும்

Saturday, May 6th, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நடவடிக்கைக்காக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா  454 மில்லியன் ரூபா, பணத்தை ஒதுக்கிஇருந்தார் என கூட்டு எதிற்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் சி.ஆர். ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர்  கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் இணைந்து செயல்பட்டன, இந்த சக்திகளின் செயல்பாடுகளினால் ஆட்சிக்கு  வந்த தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொதுமக்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் ரட்னாயக்க தெரிவித்தார்.

எமது மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளான பொதுமக்களுடன்  கைகோர்த்து மகிழ்ச்சியடைந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை திரும்பப் பெற்றதன் மூலம் இந்த அரசாங்கம் தனது உண்மையான நிறங்களை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்..

நாடாளமன்ற உறுபினர் சுமந்திரன் போன்றவர்களுக்கே  பாதுகாப்பு அதிகரிக்கப் படுகிறது ஆனால் பயங்கர வாதிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றிய தலைவர் ராஜபக்ஷவிற்கு வழங்கபட்ட  பாதுகாப்பு  நீக்கப் படுகிறது இதுதான் நல்லட்சியா எனவும் கேள்வி எழுப்பினார் கூட்டு எதிற்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் சி.ஆர். ரட்நாயக்க

Related posts: