இந்திய கடலோர காவற்படையால் படையால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகள் ஒப்படைப்பு!

Saturday, December 16th, 2017

இந்திய கடலோர காவற்படையால் கைப்பற்றப்பட்;ட இலங்கை மீனவர்களின் படகுகள் உரிய மீனவர்களிடம் நேற்றையதினம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியக்கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக இலங்கையைச்சேர்ந்த மீனவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்ட தடுத்த வைக்கப்பட்டிருந்தனர். குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் படகுகள் தடுத்து வைக்கப்படடிருந்தன.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட மூன்று பலநாட்கலன்கள் (ஆரடவi டிழயவ) நேற்றைய தினம் இரு கடலோர காவற் படையால் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டஇ இலங்கை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்திருந்தனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நேற்று அப்பலநாட் கலன்கள் உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று படகுகளும் தென்னிலங்கையைச்சேர்ந்த மீனவர்களுடையதென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைக்கடற்படையால் கடந்த மாதங்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து நேற்றப் புத்கிழமை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: