இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் – தனியார் வைத்தியசாலைகளிலும் இலவச சிகிச்சை பிரிவு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 26th, 2023

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை பிரிவுகளை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை முப்படை மருத்துவ கல்லூரி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: