இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் – மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்ய இரு தரப்பும் இணக்கம்!
Thursday, December 7th, 2023
எட்கா ஒப்பந்தம் அல்லது உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு இரு தரப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
குறித்த உடன்படிக்கை தொடர்பில் கடந்த மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்ற 12 ஆவது சுற்று கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தகவல்களை முன்வைத்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
எட்கா ஒப்பந்தம் தொடர்பான 13ஆவது சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


