இந்திய அரசாங்கத்தின் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் கலாசார மையம்:  பணிகளை நேரில் ஆய்வு செய்த யாழ்.இந்தியத் துணைத் தூதுவர்!

Thursday, November 10th, 2016

இந்திய அரசாங்கத்தின் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ். பொதுநூலகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ். மத்திய கலாசார மையத்தின் ஆரம்பக் கட்ட நிர்மாணப் பணிகள்  தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஐன் தலைமையிலான உயரதிகாரிகள் மேற்படி கலாசார மையத்தின் நிர்மாணப் பணிக்கான ஆரம்பக் கட்ட வேலைகளை இன்று வியாழக்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். அத்துடன் துறை சார்ந்த  தொழில்நுட்பவியாளர்களுடன் இந்தக் குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணித்தியாலங்களாக இந்த ஆய்வுப் பணி நடைபெற்றது.

நவீன முறையில் அமையவுள்ள இந்தக் கலாசார மையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் இரண்டு வருடகாலப் பகுதிகளில் நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed (3)

Related posts: