இந்தியா வழங்கிய கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த பிணை கடனில் ஒரு தொகுதியே இந்திய கடனுக்காக செலுத்தப்பட்டது.
இதன்படி, 121 மில்லியன் டொலர் இந்தியாவுக்கு மீளச் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
5 பொருட்களுக்கான வரி விலக்களிப்பு
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அருவருப்பானது - சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!
சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிப்பு – பல பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சுற்றறிக்கைக்கு ...
|
|