இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ரணில் – பாரதப் பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்புக்கான திகதியும் நிர்ணயம்!
Monday, June 12th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20 ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி பெரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பெரிஸ் கிளப் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


