பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்’ – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

சென்னை – யாழ்ப்பாணம்- சென்னை இடையேயான விமான சேவையை மீண்டும் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், நேற்று விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட ஒலிப்பதிவு உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த கோபால் பாக்லே, இந்தியா – யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையேயான நேரடி மற்றும் விரைவான விமானப் பயணங்கள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது இரு நாட்டு மக்களிடையே பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: