இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்!
Wednesday, June 26th, 2024
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்துள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் சேனுகா டி செனவிரத்ன ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனுகா டி. செனவிரத்ன புதுடில்லியியில் ஜெய்சங்கரை சந்தித்தபோதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், தமது கொழும்பு விஜயம் உட்பட இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
வளர்ப்பு நாய்களுக்கு இலக்கங்கள் பொறித்த கழுத்துப்பட்டி!
வடக்கின 9 இடங்கள் கொரோனா தொற்றின் ஆபத்துள்ள பகுதிகளாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!
40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பு தொடர்பில் வெளியாகிறது வர்த்தமானி – கையொப்பமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசி...
|
|
|


