இந்தியாவுடன் விமான பயிற்சியில் ஈடுபடும் இலங்கை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிப்பு!
Friday, May 5th, 2023
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விமானப் பயிற்சி ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்தகைய கூட்டுப் பயிற்சிக்கான அடிப்படைகள் குறித்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய விமானப்படைத் தளபதி ஏயார் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரியுடன் விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எயார் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக மே முதலாம் திகதியன்று இலங்கை வந்தடைந்தார்.
இந்தநிலையில் அவருடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் கடற்பரப்பில், இரு விமானப்படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கிரிக்கெட் துறையை பாடசாலைகளில் மேம்படுத்த பிரதமர் அலுவலகம் நேரடித் தலையீடு!
வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் - சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக தற்காலிக முட...
|
|
|


