கிரிக்கெட் துறையை பாடசாலைகளில் மேம்படுத்த பிரதமர் அலுவலகம் நேரடித் தலையீடு!

Monday, August 29th, 2016

பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்தும் பொறுப்புக்களை பிரதமர் அலுலகம் கண்காணிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்த இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதன்படி, பத்தாண்டு காலத்தில் கொழும்புக்கு வெளி மாவட்டங்களிலிருந்து பாடசாலை மட்ட வீரர்கள் தேசிய மற்றும் அணிகளில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்த முதற்கட்ட நடவடிக்கையாக கிராமிய பாடசாலைகளுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்கவும், கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பிக்கக்கூடிய அனைத்து பாடசாலைகளிலும் ஆறு மாத காலத்திற்குள் கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இலங்கையில் பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்த பிரதமர் ஒருவர் நேரடித் தலையீடு செய்யும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.பாடசாலை கிரிக்கெட்துறையை மேம்படுத்துவது குறித்து எதிர்வரும் நாட்களில் பாடசாலை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

Related posts: