இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி ஷெனுகா செனவிரத்ன, நியமனம்!
Saturday, January 6th, 2024
………
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி ஷெனுகா செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி ரௌபதி மோமுரிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார்.
அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
000
Related posts:
ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பில்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் - முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங...
பாடசாலை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - பாடத்திட்டத்தில் அடுத்த வருடம்முதல் சீர்திருத்தங்...
|
|
|


