வளமான எதிர்காலத்தை உருவாக்க  பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம் – ஈ.பி.டி.பி யின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே. ஜெகன்!

Monday, December 12th, 2016

எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைக்க தயாராகவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் கா.வே.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அழைப்பு விடுத்துள்ளார்.

அளவெட்டி அறிவொளி சனசமூகநிலையத்தின் 25வது ஆண்டு நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

unnamed (5)

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றைய இளைஞர்கள் நாளைய சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.  ஆனால் இன்று அந்த சூழ்நிலை மாறியுள்ளதை பார்க்கும்போது வேதனையளிக்கின்றது. தற்போது யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதுடன் மாணவர்கள் போதைவஸ்து பாவனைகளுக்கு   அடிமையாகியுள்ளனர்.

unnamed (3)

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த போது இப்பகுதி மக்களுக்கு பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்திசெய்து கொடுத்துள்ளார். அவரது சேவைகள் தொடர்ந்து இப் பிரதேச மக்களுக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார், மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் கட்சி மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்து உண்மை நிலைகள் வெளிக்கொணரப்பட்டு இருக்கின்றது.  அவற்றில் இருந்து நாங்கள் விடுபட்டு கொண்டிருப்பதாகவும் வரலாறு எங்களை விடுவிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

unnamed (2)

இதனிடையே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு கௌரவிக்கும் முகமாக மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கி வைத்ததோடு அறிவொளி சனசமூக நிலையத்தால் குறித்தபகுதி கிராம சேவையாளரான கணேசதாசனுக்கு கா.வே. குகேந்திரன் (வி.கே.ஜெகன்)   பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (4)

இந் நிகழ்வில் வலிவடக்கு நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) மற்றும் வலிவடக்கு பிரதேச நிர்வாக உறுப்பினர் உதயகுமார் அகியொரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

unnamed (1)

Related posts: