இத்தாலி சென்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தாலிக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ரோமில் இடம்பெறுகிற உலக வன பாதுகாப்பு குழுவின் 24வது அமர்வு மற்றும் 6வது உலக வனவள வாரம் ஆகியவற்றில் பங்கு கொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி இன்று மதியம் ரோம் நோக்கி புறப்பட்டார்
அங்கு செல்லும் ஜனாதிபதி பலதரப்பட்ட அரசியல் தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை வந்தார் றீட்டா ஐசக் !
தலைக் கவசங்களுக்கு தரச் சான்றிதழ் அவசியம்!
அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் ...
|
|