இணுவில் பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
Monday, October 22nd, 2018
புதிய எல்லை நிர்ணயத்தின் பிரகாரம் இணுவில் கிழக்கு பகுதியின் ஒரு பகுதி நல்லூர் பகுதியுடன் சேர்க்கப்படுவதை எதிர்த்து குறித்த பிரதேச மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றையதினம் நடைபெற்றது.
இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் மௌன ஊர்வலமாக சென்று உடுவில் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு முன்னெடுத்த குறித்த போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான வலன்ரயன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் மனோ உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!
அறிவித்தப்படி 8 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அ...
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசின் நோக்கம் - ஜனாதிப...
|
|
|
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை துரிதமாக வெளியிட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்ப...
சீனாவின் விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்...
பொதுமக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டும் -மின்சார நெருக்கடி குறித்து அரசாங்கம் அவசர அறிவுதுத்து!


