இடசாரி சக்திகளோ வலதுசாரி சக்திகளோ எவரானாலும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவிப்பு!
Sunday, March 3rd, 2024
இடசாரி அரசியல் சக்திகள் மற்றும் வலதுசாரி அரசியல் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த தரப்பினரும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதை பொறுப்புடன் கூறுவதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசியலில் நடுநிலையாளர்களின் பலம் தற்போது மேலோங்கி இருக்கின்றது.இவர்களின் இன்றி எந்த தரப்பினருட் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.
இதேவேளை நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண இடதுசாரிகளிடையே ஐக்கிய தேவை. இதனால் இடதுசாரி சக்திகள் ஒன்றாக ஒன்றிணைய வேண்டும்.
அதேவேளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தனது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்தியுள்ளதுடன் கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் டியூ.குணசேகர மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


