இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள முக்கிய தகவல்!

Tuesday, May 12th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 440 முப்படையினரும் இந்த தொற்றாளர் பட்டியலில் உள்ளடங்குவதாகவும் அதில் 429 பேர் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 22 தொற்றாளர்கள் இன்று பூரண சுகமடைந்து வீடு திரும்பினர்.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்து 9 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற 8 பேரும் இரணவில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற 4 பேரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற ஒருவருமே இவ்வாறு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி 343 தொற்றாளர்கள் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் மேலும் 511 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 114 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: