ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைக்கும் யாழ்ப்பாணத் திருடர்கள் – ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு அவரிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள் மற்றும், 7 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும் கைப்பற்றிய பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது
000
Related posts:
தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் மின்சக்தி அமைச...
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொ...
இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு - மக்களுக்கு விடப்பட்டது முக்கிய அறிவி...
|
|